11 லட்சம் சதுரடியில் அமேசான் நிறுவனம் திறக்கும் புதிய அலுவலகம்
பிரபல ஈ காமர்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வரும் அமேசான் அந்த துறையில் மட்டுமல்லாமல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமேசான் கிண்டில், திரைத்துறையினர் பயன்பெறும் வகையில் அமேசான் பிரைம்,OTT மற்றும் அமேசான் மியூசிக் என பல்வேறு துறைகளில் கால் பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த நிறுவனமானது தனது செயல்பட்டுக்காக முன்னணி நகரங்களில் அலுவலகங்களை நடத்தி வருகிறது. மேலும் தங்களது வர்த்தகத்தை விரிவு படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்களை ஆரம்பித்து வருகிறது. இதற்கான அலுவலகங்களை ஆங்காங்கே வாடகைக்கு எடுத்தும் பிரமாண்டமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது பெங்களூர் வடக்கு பகுதியில் வர்த்தகத்தை விரிவு படுத்தும் வகையில் அதற்கான அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த அலுவலகம் 1.1 மில்லியன் சதுர அடி அளவில் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தை அமேசான் நிறுவனம் சாத்வா குழுமத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.