T20 World Cup 2024: இந்தியா vs கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்து

by Arun Kumar
0 comments

T20 World Cup 2024: இந்தியா vs கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்து

T20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

T20 உலகக்கோப்பை தொடரில் 33 வது லீக் ஆட்டமானது இன்று புளோரிடா மாகாணத்தில் உள்ள  லாடெர்ஹில் நகரில் நடைபெறவிருந்தது. இந்த ஆட்டம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்தது.

இந்நிலையில் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் இந்த ஆட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி என வழங்கப்பட்டுள்ளது.

banner

அந்த வகையில் A பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றில் நுழைந்துள்ளது.