Table of Contents
வாட்சப் என்பதன் தமிழ் பொருள் – Whatsapp Meaning in Tamil
Whatsapp – வாட்சாப்
வாட்சாப் (Whats App) என்பது இணையத்தின் உதவியுடன் தகவல்களை பரிமாற உதவும் ஆப் ஆகும். ஆரம்ப காலத்தில் எழுத்து வடிவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள SMS என்னும் குறுஞ்செய்தி பயன்பட்டது. ஒரு செய்திக்கு என கட்டணம் வசூலிக்கும் முறையிலிருந்து அளவில்லா செய்திகள் அனுப்பும் வசதி மற்றும் தற்போதுள்ள தினம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செய்திகள் என SMS பல பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.
குறுஞ்செய்தி
இந்த குறுஞ்செய்தி வாயிலாக தகவலை அனுப்பும் போது ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்டு அனுப்பும் சூழல் இருந்தது. குறிப்பாக அளவுக்கு அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது இன்னொரு SMS எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளும் என்பதால் முடிந்த வரை சுருக்கமாக செய்திகளை அனுப்ப முயற்சிப்பார்கள்.
இதையெல்லாம் சரி செய்யும் வகையில் தான் வாட்ஸ் ஆப் எனும் செயலி வாயிலாக தகவலை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக எழுத்து வடிவில் தகவல்களை அனுப்புவது மட்டுமல்லாமல் ஃபோட்டோ மற்றும் வீடியோ வடிவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதிகளையும் வாட்சாப் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வாட்ஸாப் மூலமாக பணம் அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாட்சாப்மூலம் இந்த வசதிகளை பயன்படுத்த இணைய வசதி வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Whatsapp Meaning in Tamil:
இவ்வளவு வசதிகளை கொண்ட இந்த செயலியை பெரும்பாலும் அதே ஆங்கில பெயரைக் கொண்டே அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் குறிப்பிட்டுள்ளபடி தொழில்நுட்பம் வளர வளர அதற்கான ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையும் நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். அப்படி உருவாக்கினால் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சி தொடரும்.