Tuesday, October 7, 2025

விஜய் தனது அப்பாவை ஒதுக்க இது தான் காரணமா? வெளியான புதிய தகவல்

by Arun Kumar
0 comments
S. A. Chandrasekhar

விஜய் தனது அப்பாவை ஒதுக்க இது தான் காரணமா? வெளியான புதிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்களிடத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

விஜய்

தமிழ் ரசிகர்களுக்கு விஜய்யிடம் பிடித்த ஒன்று அவருடைய எளிமை தான். ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் முதல் பொதுமக்கள் வரை என சிலருக்கு விஜய்யிடம் பிடிக்காதது அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை அவர் ஒதுக்குவது தான்.சமீபத்தில் நடந்த வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவர் பெற்றோரிடம் நடந்து கொண்டவிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் தனது தந்தையை ஒதுக்க காரணம் என்ன என பலரும் இது குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அவர் பொதுவெளிகளில் நடந்து கொள்வது தான் அதற்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.

எஸ்.ஏ.சி vs விஜய்

ஆரம்ப காலகட்டத்திலிருந்து இருவருக்குமிடையே இந்த சண்டை உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இருப்பினும் அவர் பொதுவெளிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்தால் காலில் விழுந்து விடுவாராம்.

banner

இந்த செயலை கண்டித்து பல முறை விஜய் தனது தந்தையிடம் சண்டை போட்டுள்ளாராம். இதனால் தான் விஜய் ஆரம்ப கால கட்டத்திலேயே தனது தந்தையை வெறுத்துவிட்டதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது